எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று

முக்கிய செய்திகள் 3

2024 லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டி வீரர்கள் ஏலம் இன்று நடைபெறவுள்ளது.

கொழும்பில் நடைபெறும் இந்த வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 420 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

இதில் 154 இலங்கை வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இந்த ஏலத்தை பிரபல இந்திய ஏலதாரரான சாரு ஷர்மா நடத்துகிறார்.

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக், எல்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 01 ஆம் திகதி தொடங்க உள்ளது. இப்போட்டியில் 05 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்தப் போட்டிகள் பல்லேகல, தம்புள்ளை மற்றும் ஆர் பிரேமதாச மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி ஜூலை 21ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.