சிறைக்கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு

முக்கிய செய்திகள் 2

காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட 24 வயதுடைய நபர் ஒருரே இவ்வாறு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

குறித்த கைதி மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும், இது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர மாத்தறை சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதியும் காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பரில் மாத்தறை சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சல் கைதிகள் பாதிக்கப்பட்டதோடு, சில மரணங்களும் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.