டயனா கமகே பிணையில் விடுவிப்பு!

முக்கிய செய்திகள் 3

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடவுச்சீட்டு வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழுப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மோசடியான முறையில் இலங்கை கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, குறித்த விடயம் குறித்தான அறிக்கையை இன்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தில் அஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மோசடியான முறையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட பல குற்றச்சட்டுக்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.