அரச திணைக்களங்களில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி

முக்கிய செய்திகள் 1

ஈரான் ஜனாதிபதி அமரர் இப்ராகிம் ரைஸியின் மரணத்தையொட்டி இலங்கையில் துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில், இன்றைய தினம் அரச திணைக்களங்களின் இலங்கையின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதேவேளை தேசிய துக்க தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களில் இன்றைய தினம் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் விடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இன்றைய தினம் தேசிய துக்கதினமாக அறிவித்து தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் விடுமாறு அறிவித்திருந்தது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் உட்பட அரச திணைக்களங்களில் இன்றைய தினம் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.