வெசாக் பண்டிகை – நாடளாவிய ரீதியில் 321 தோரணங்கள், 4,700 வெசாக் தானங்கள்

முக்கிய செய்திகள் 3

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 321 தோரணங்கள் கட்டப்பட்டுள்ளதுடன் 4,700 வெசாக் தானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10,689 விகாரைகளில் வெசாக் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (21) செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அரச வெசாக் பண்டிகை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் பண்டிகையானது மாத்தளை தர்மராஜ் விகாரையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.