
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள ஹந்தல மற்றும் பமுனுகம பிரதேச மீனவர்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி வருகின்றனர்.
அதற்காக 9 மீனவ சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி இன்று கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.
வத்தளை அலகந்த நகருக்கு ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கப்பலின் தீ விபத்தால், நாட்டின் மேற்கு கடல் பகுதி கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை சந்தித்தது.