ஈரானின் 14 வது அதிபர் தேர்தல் தேதி அறிவிப்பு

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உட்பட அவருடன் வந்த முக்கிய அரசு உறுப்பினர்கள் அஜர்பைஜான் நாட்டில் அணை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹெலிகாப்டரில் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது.மோசமான வானிலைக்கு மத்தியில் ஹெலிகாப்டர் விழுந்த இடத்துக்கு மீட்டுப்படை சென்றது. பின் இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி உட்பட அனைவரும் விபத்தில் உயிரிழந்தது நேற்று (மே 20) காலை உறுதிசெய்யப்பட்டது. விபத்து தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டின் தற்காலிக அதிபராகத் துணை அதிபர் முகமது மொக்பர் பதவியேற்றார். இந்நிலையில் ஈரான் நாட்டின் 14வது அதிபர் தேர்தல் ஜூன் 28ம் தேதி நடைபெறும் என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.