பலத்த காற்று – வீடுகளின் மீது மரம் முறிந்து விழுந்ததில் நால்வர் படுகாயம்

முக்கிய செய்திகள் 1

இரத்தினபுரி, கொல்லகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், பலாங்கொடை ஹெரமிட்டிகல பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக மேலும் ஒரு வீடு மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தை பார்வை இட சென்றவர் மீது கித்துள் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குறித்த நபரும் காயமடைந்துள்ளார்.

அதேபோல பலாங்கொடை வட்டவல பிரதேசத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த மூவரும் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் சில வீடுகள் பகுதி அளவில் சோதடைந்துள்ளன