பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியர்!

முக்கிய செய்திகள் 3

பிரித்தானியாவில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெலுங்கானாவில் பிறந்து பிரித்தானியாவில் வசித்து வரும் உதய் நாகராஜூ என்பவரே அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

உதய் நாகராஜூ பிரித்தானியாவில், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். தற்போது “ஏஐ பாலிசி லேட்ஸ்” நிறுவனர் மற்றும் இயக்குநராக இருக்கும் இவர், வடக்கு பெட்போர்ட்ஷையர் தொகுதியில், போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில், உதய் நாகராஜூ தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.