கொழும்பு நகர எல்லையில் இரண்டு நாட்களில் முறிந்து வீழ்ந்த சுமார் 20 மரங்கள்

முக்கிய செய்திகள் 2

கடந்த இரண்டு நாட்களில் கொழும்பு நகர எல்லையில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.

அதன் பிரகாரம் கொழும்பு நகரில் மரங்கள் ஆபத்தானவை என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், முறிந்து வீழ்ந்த மரங்களில் அபாயகரமானதாக இனங்காணப்பட்ட மரங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு நகர எல்லையில் ஆபத்தில் உள்ள சுமார் 200 மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி இதுவரை சுமார் 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Trending Posts