பாணுக்குள் கண்ணாடிப் பீங்கான் துண்டு – யாழில் சம்பவம்

முக்கிய செய்திகள் 1

பாண் வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள் கண்ணாடிப் பீங்கான் துண்டைக் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று (21) இரவு வாங்கிய பாணிலேயே கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது.

குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகள் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Trending Posts