மன்னார் – மதவாச்சி வீதியில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை!

முக்கிய செய்திகள் 1

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

முருங்கன் பன்ணையின் பின் பகுதியூடாக வந்த குறித்த யானை பன்ணையின் சுற்று வேலியை உடைத்துக் கொண்டு மன்னார்-முருகன் பிரதான வீதிக்கு வந்து சிறிது நேரத்தின் பின்னர் வீதியைக் கடந்தது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த யானை காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இரவு பகல் பாராது காட்டு யானையின் திடீர் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் மக்களை அவதானமாக பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.