பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

செய்திகள்

ஜா-எல பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தை நடத்திய பெண் ஒருவர் சோயா பொருட்களைப் பொதி செய்து அதிக விலையில் விற்று பண மோசடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் .

41 வயதுடைய இந்த பெண் கடவட சூரியகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவர் நுகேகொட நாவல பகுதியில் வாடகை அடிப்படையில் வீடொன்றைப் பெற்று இந்த மோசடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெரபிஸ்டாக பணியாற்றி வரும் இந்த பெண் பொதி செய்யப்பட்ட சோயா பொருட்களை இணையத்தில் விளம்பரமாக வெளியிட்டு அதிகமானோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார் .

இத்துடன் இந்த வியாபாரம் பிரமிட் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .