வீட்டில் தனிமைலிருந்தவர் கட்டையால் தாக்கப்பட்டு கொலை

முக்கிய செய்திகள் 1

வீட்டில் தனியாக இருந்த ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முதியவரின் சடலம் அவருடைய வீட்டில் மீட்கப்பட்டுள்ளது .

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இனந்தெரியாத நபர் ஒருவர் இவருடைய வீட்டில் புகுந்து அவரை கட்டையால் தாக்கி கொலை செய்ததாகத் தெரியவந்துள்ளது .

உயிரிழந்தவர் கொழும்பு 13, ஜம்பட்டா வீதியை சேர்ந்த 67 வயதுடையவர் என்பதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .