விஜயதாசவின் மனு ஒத்திவைப்பு!

முக்கிய செய்திகள் 2

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளர் நாயகமாக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தமை சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவினால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரித்து உத்தரவு ஒன்றை வௌியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு இன்று மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் மூன்றாவது நாளாகவும் ஆராயப்பட்டது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, கிஹான் குலதுங்க மற்றும் பிரேங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் மீண்டும் அழைக்கப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி துமிந்த திஸாநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இதையடுத்து, மேலதிக சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் 31ம் திகதிக்கு மனு ஒத்திவைக்கப்பட்டது.