நாட்டில் ஏற்பட்டுள்ள தென்மேல் பருவபெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் கடும் காற்று, பலத்த மழையூடான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த, மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் தொடர்ச்சியான மழையும், பலத்த காற்றும் வீசுகிறது.
இதன் காரணமாக வலப்பனை பிரதேசத்தில் கடந்த (21) ஆம் திகதி முதல் இரண்டு நாட்களாக வீசும் கடும் காற்றினால் வலப்பனை ரூபஹா, மற்றும் தெரிப்பெயே ஆகிய பிரதேசங்களில் வீதி ஓரங்களில் காணப்படும் பாரிய மரங்கள் மின்சார இணைப்பு வயர்கள் மீது சரிந்தும், முறிந்தும் வீழ்ந்து மின் கம்பங்களும் உடைந்துள்ள நிலையில் இப் பிரதேசத்திற்கான மின் விணியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.