பதவியவில் சிக்கிய 19 வயது துப்பாக்கிதாரி!

முக்கிய செய்திகள் 1

கடந்த திங்கட்கிழமை (20) ஊறுவ, ஓமாரகடவல பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஊறுவ பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த நபர் தனது சகோதரரின் வீட்டில் இரவு உணவருந்திவிட்டு தனது வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது மறைந்திருந்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியே இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர் பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் தந்தைக்கும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.