யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (21) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஊரெழு கிழக்கை சேர்ந்த 48 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.