மரம் முறிந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் பலி

முக்கிய செய்திகள் 1

குளியாப்பிட்டிய - மாதம்பே பிரதான வீதியில் சுதுவெல்ல பகுதியில் இன்று புதன்கிழமை (22) பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பே, கல்முருவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கல்முருவயிலிருந்து சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்துள்ள நிலையில், கடும் மழை காரணமாக வீதியோரத்திலிருந்த பாரிய மரமொன்றிற்கு அடியில் நின்றுள்ளார்.

இதன் போது திடீரென அந்த மரம் இவர் மீது முறிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.