கம்பஹாவில் வெசாக் தோரணம் உடைந்து விழுந்து இருவர் காயம்

முக்கிய செய்திகள் 1

கம்பஹா, மரதகஹமுல பகுதியில் வடிவமைக்கப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று திடீரென உடைந்து வீழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (22) புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பலத்த காற்றினால் இந்த வெசாக் தோரணம் உடைந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐந்து நபர்கள் இணைந்து இந்த வெசாக் தோரணத்தை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில், அவர்களில் இருவர் தோரணத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டிருந்துள்ளனர்.

இதன்போது, இந்த வெசாக் தோரணமானது திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது தோரணத்தின் உச்சியில் நின்றுகொண்டிருந்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர்கள் திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும், இந்த வெசாக் தோரணத்தை மீண்டும் வடிவமைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.