நாட்டை கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் பெரமுனவிடமே காணப்படுகின்றது – திஸ்ஸ குட்டியாராட்சி

முக்கிய செய்திகள் 1

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாம் அறிவிப்பை வெளியிட்ட சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தி தடுமாற்றமடைந்ததை நாம் அறிவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராட்சி தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் பொதுஜன பெரமுனவிடமே காணப்படுகின்றது. கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அதற்கான யோசனைத் திட்டங்கள் காணப்படுகின்றன.

நாட்டை அழித்தல் அதேபோல் தீவைக்கும் கலாசாரங்கள் சில தரப்பினரிடம் காணப்படுகின்றன. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நாம் அறிவிப்பை வெளியிட்ட சந்தர்ப்பத்தில் தேசிய மக்கள் சக்தி தடுமாற்றமடைந்ததை நாம் அறிவோம்.

நாட்டில் எந்தவொரு மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களை நிறுத்தமுடியாது. அதேபோல் வெறுமனே 3 உறுப்பினர்களினால் தேர்தலில் வெற்றிபெறவும் முடியாது” என திஸ்ஸ குட்டியாராட்சி தெரிவித்தார்.