ஈரான் ஜனாதிபதி மறைவு: நாடாளுமன்றில் ஒரு நிமிடமௌன அஞ்சலி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை நினைவு கூர்ந்து  நாடாளுமன்றில் இன்று ஒரு நிமிடமௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாட்டில் நேற்று தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் குறிப்பினை பதிவிட்டார்.

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தனது இரங்கல் குறிப்பை வெளியிட்டிருந்தார்.