முதல் டி20 போட்டியில் வெற்றி: வங்காளதேசத்துக்கு அதிர்ச்சி அளித்த அமெரிக்கா

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

ஹூஸ்டன்:22

வங்காளதேசம் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ஹூஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஹிருடோய் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். மஹமதுல்லா 31 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. 14.5 ஓவரில் அமெரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து களமிறங்கிய கோரே ஆண்டர்சன், ஹர்மித் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

இறுதியில், அமெரிக்க அணி 19.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.