அரிசி இறக்குமதி அவசியமில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நுகர்வுக்காக அரிசி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய தேவையில்லை எனவும், உரியளவு நெல் தொகை நாட்டினுள் காணப்படுவதாக அனைத்து இலங்கை அரிசி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தம்புள்ளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இலங்கை அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித பேரரா இதனைத் தெரிவித்துள்ளார்.