பிரதமராகும் நாமல் ராஜபக்ஷ?

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கொழும்பு, ஏப் 14

அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டம் இலங்கை முழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

இந்த நிலையில் காலிமுகத்திடலில் தொடர்ந்து இன்று 6 ஆவது நாளாக போராட்டம் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாக வைத்து நாமல் ராஜபக்சவை பிரதமராக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என தேசிய பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் நாமல் ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் கோசங்கள் எழுப்பியதைத் தொடர்ந்து பிரதமாக நாமலை நியமிப்பதற்கான ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.