இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மூன்று மாதங்களின் பின்னர் இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி நாடளாவிய ரீதியில் இந்த வாரம் பகிர்ந்தளிக்கப்படுமென அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் வர்த்தக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்ணாந்து தெரிவித்துள்ளதுடன், அடுத்த மாதமளவில் மேலும் 150,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக வெளியாகும் செய்தி, வதந்தி எனவும், வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதை விரும்பாதவர்கள், பிளாஸ்டிக் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக பொய்ப்பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வோர் மற்றும் வர்த்தக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக பெர்ணாந்து மேலும் தெரிவித்துள்ளார்.