பிரேசிலில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

பிரேசில்:06

தெற்கு பிரேசிலின் சான்டா கட்டரினா மாகாணம் வால்டரேஸ் நகரில் இருந்து மினாஸ் கிரேஸ் மாகாணம் புளோரினோபொலிஸ் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இடபோ நகர் அருகே நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதன் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனிடையே கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை விமானிகள் உடனடியாக இழந்தனர். இதனால் நடுவானில் இருந்து கீழே தரையில் விழுந்து அந்த விமானம் நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.