அரசியலுக்கு வந்தது தாம் மக்களை ஏமாற்றுவதற்காக அல்ல: சஜித்!

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சமூக சேவை மற்றும் அரசியலுக்கு வந்தது தாம் மக்களை ஏமாற்றுவதற்காக அல்ல என்றபடியால், கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தை கட்டுப்படுத்த நீரேற்று நிலையங்களை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தைப் பெற்று ஆட்சிப் பிழைப்பு நடத்தும் ஆட்சியாளர்களே தற்போதுவரை இருந்து வருகின்றனர். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அதிகாரம் இல்லாமலே நாட்டிற்கு பெறுமதி சேர்த்துள்ளனர். அதிகாரம் கிடைத்த பின்னர் மக்களை ஏமாற்றாமல் இந்தப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அண்மையில் பெய்த கடும் மழையினால் களனி கங்கையை அண்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் விசாரிப்பதற்காக கொலன்னாவ பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளையிலயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.