2024 T20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் முதற்சுற்று போட்டிகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
போட்டியின ்முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு 125 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகப்பட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹுசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதேபோல், டஷ்கின் அஹமட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.