கந்தப்பளையில் பஸ் விபத்து – ஒருவர் படுகாயம்!

முக்கிய செய்திகள் 1

நுவரெலியா கந்தப்பளை நகரில் சனிக்கிழமை (08) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கிய நபரொருவர் படுகாயங்களுக்குள்ளாகி கவலைக்கிடமான நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பஸ் விபத்தில் கந்தப்பளை கொங்கோடியா தோட்ட கீழ் பிரிவைச் சேர்ந்த 42 வயதான நபரே படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு பஸ்ஸின் சாரதியை கைது செய்த கந்தப்பளை பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.