நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்றார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 1

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று மாலை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதனை இரண்டு அமைச்சர்களுக்கும் தான் தெரியப்படுத்துவதாகவும், நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என்பதை வடமாகாண ஆளுநருக்கு தொலைபேசியில் அறிவித்ததாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டவர்களுடன், தொடர்பில் உள்ளதாகவும் அவரது கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விரைவில் சந்தித்து பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இரா.சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.