இரண்டு யானைத் தந்தங்களுடன் ஒருவர் கைது

முக்கிய செய்திகள் 1

இரண்டு யானைத் தந்தங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம், பன்சல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்களில் ஒன்று 37.3 சென்டிமீட்டர் எனவும் மற்றையது 37.5 சென்டிமீட்டர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.