கைத்துப்பாக்கியுடன் “மாமியா” கைது

முக்கிய செய்திகள் 2

கைத்துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சீதுவை வடக்கில் வசிக்கும் 34 வயதுடைய "மாமியா" என அழைக்கப்படும் நபர் ஆவார் .

இந்த கைத்துப்பாக்கியானது எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டதென இதுவரை கண்யறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.