இஸ்ரேலிய தாக்குதலில் 274 பாலஸ்தீனியர்கள் பலி: ஹமாஸ் சுகாதார அமைச்சு!

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

காசாவில் இஸ்ரேல் நடத்திய அண்மைய தாக்குதலில் 274 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
 
இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்கும் நோக்கில் இஸ்ரேல் குறித்த தாக்குதலை நடத்தியிருந்தது. 
 
இந்த தாக்குதலில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ஹமாஸ் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. 
 
குறித்த தாக்குதலில் 100ற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.