ஒலிப்பெருக்கி மூலம் எதிர்ப்பு பிரசாரம் – 300 பலூன்களில் குப்பையை அனுப்பிய வட கொரியா

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தென் கொரிய எல்லைக்குள் குப்பைகளால் நிரம்பிய 300-க்கும் அதிக ராட்சத பலூன்களை வட கொரியா அனுப்பியுள்ளது.

முன்னதாக கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங் எல்லை பகுதியில் ஒலிப்பெருக்கிகள் மூலம் பிரசாரம் செய்வதை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்திருந்தார். ஒலிப்பெருக்கி பிரசாரம் செய்வதால் தேவையற்ற பிரச்சினைகள் எழலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மிக அபாயகரமான சூழலுக்கு இது வழிவகுத்துவிடும்," என்று அவர் தெரிவித்திருந்தார். சமீபத்திய பலூன்களில் குப்பை காகிதங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இடம்பெற்று இருந்தது.

வட கொரியாவின் பலூன்கள் அனுப்பும் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென் கொரியா சார்பில் ஒலிப்பெருக்கி பிரசாரம் துங்கப்பட்டது. இதில் ஒலிப்பெருக்கிகள் மூலம் கிம் ஜாங் உன் எதிர்ப்பு பிரசாரம் மற்றும் பிரபலமான தென் கொரிய பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது.