விராட் கோலியின் 5 ஆண்டுகால சாதனையை ரிஷப் பண்ட்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

9-வது டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

கடந்த 2007-ம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் சீசனில் டோனி தலைமையிலான இந்திய அணியானது டிராபியை கைப்பற்றியது. இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராபின் உத்தப்பா அதிக ரன்கள் குவித்தார். அவர் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டி டிராவில் முடிந்த நிலையில் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் கௌதம் காம்பீர் 54 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 61 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதே போன்று 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2016-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த 2022 -ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் தான் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழக்கவே, ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 31 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 5 ஆண்டுகளாக விராட் கோலி படைத்து வந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.