கொள்ளுப்பிட்டியில் பஸ் பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்தின் தடுப்பான் பழுதானதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பேருந்து மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.