
பெருந்தோட்ட நிறுவனங்கள் சிலவற்றின் தொழிலாளர்கள், இன்றைய தினம் (10) தமக்கு வழங்கப்பட்ட மாதாந்த வேதனத்தை ஏற்பதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த மொத்த வேதனம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்ட வேதனத்தை மாதாந்த வேதனத்தில் உள்ளடக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதுளை மற்றும் ஹப்புத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேதனத்தைப் பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
இதனால் சில பெருந்தோட்டங்களில் இன்றைய தினம் வேதனம் வழங்குவதற்காகச் சென்றிருந்த தோட்ட முகாமையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.