அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று (10) பிற்பகல் கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதையடுத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.