சீரற்ற காலநிலை: 14 மாவட்டங்களை சேர்ந்த 1,21,176 பேர் பாதிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாட்டில் பெய்துவரும் கடும் மாழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 1,21,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேற்படி அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (10) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 இரத்தினபுரி, கேகாலை, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், கண்டி மற்றும் பதுளை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 32,296 குடும்பங்களைச் சேர்ந்த 1,21,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 77 வீடுகள் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மேலும் மேற்படி அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 147 குடும்பங்களைச் சேர்ந்த 513 பேர் பாதுகாப்பான இடங்களென அடையாளம் காணப்பட்டுள்ள 19 முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.