இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு 875 கோடி ரூபாய் – அமைச்சர் ஷெஹான்

முக்கிய செய்திகள் 2

இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு 875 கோடி ரூபாய் மதிப்பீடொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று(10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் மீளப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன், ஜனாதிபதியின் செலவுத் தலைப்புகளின் கீழ் அந்த ஏற்பாடுகளுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த ஏற்பாடுகள் காரணமாக பாதீட்டு பற்றாக்குறைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த வருடத்துக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

ருவன்வெல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக இடைக்கால ஒதுக்கீட்டு திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு முக்கிய தேர்தல் நடைபெற உள்ளதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.