யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை தமிழரசு கட்சியினரை சந்தித்தனர்.
இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது.
கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் கட்சியின் சிரேஸ்ட தலைவர் சிவிகே சிவஞானம், நிர்வாக செயலாளர் குலநாயகம் ஆகியருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தலைமையிலான குழுவினர் சந்திப்பை மேற்கொண்டனர்.