பனிக்கர் புளியங்குளத்தில் 235 ஏக்கர் விடுவிப்பு

முக்கிய செய்திகள் 1

ஓமந்தை, பனிக்கர் புளியங்குளத்தில் 235 ஏக்கர் காணி வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

ஓமந்தை, பனிக்கர் புளியங்குளம் பகுதிக்கு விஜயம் செய்து காணிகளை பார்வையிட்ட பின் திங்கட்கிழமை (10) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பனிக்கர் புளியங்குளம் பகுதியில் வாழ்ந்த மக்கள் பலர் வாழ்வாதார பயிற் செய்கைக்கு நீண்ட காலமாக காணியின்றி அவதிப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற வகையில் வனவளத் திணைக்களத்துடன் பல தடவை பேசி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தற்போது அம் மக்களுக்கான காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஓமந்தை, பனிக்கர் புளியங்குளம் குளத்திற்கான காணி உட்பட மக்களின் வாழ்வாதாரப் பயிற் செய்கைக்காக 235 ஏக்கர் நிலம் வனவளத் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு அதனை விடுவித்துள்ளனர்.

இதன் மூலம் இப் பகுதியில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒரு ஏக்கர் காணி வாழ்வாதார நடவடிக்கைக்காக வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.