வேன், பஸ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! இரண்டு பேர் படுகாயம்

முக்கிய செய்திகள் 2

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கினிகத்தேன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (11) காலை 7.30 மணியளவில் இடம் பெற்றதாக கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

இதேவேளை. பேருந்துக்கும் வேனுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு குறித்த விபத்து காரணமாக ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.