சஜித்துடன் இணைய மூவர் பேச்சு

முக்கிய செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர மற்றும் ரொஷான் ரணசிங்க தலைமையிலான அரசியல் குழுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் கூட்டணியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதுடன், பின்னர், அதிலிருந்து விலகி எதிரணியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.