அரச நில அளவையாளர் சங்கம் இன்று முதல் பணிப் பகிஷ்கரிப்பு

செய்திகள்

அரச நில அளவையாளர் சங்கத்தினர் இன்று முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நில அளவை நடவடிக்கைகளை தனியாருக்கு வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சங்கத்தின் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார்.

நில அளவையாளர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts