கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை; கணவரும் கணவரின் நண்பரும் கைது

முக்கிய செய்திகள் 2

தலங்கமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலாஹேன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கமை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் கடந்த 6 ஆம் திகதி அன்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் வாக்குவாதம் எல்லை மீறியதில் உயிரிழந்த பெண்ணின் கணவரும் அவரது நண்பரும் இணைந்து இவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

ஹிங்குரக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய உயிரிழந்த பெண்ணின் கணவரும் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய கணவரின் நண்பருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.