நாடு செலுத்த வேண்டிய கடன் தொகை – அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு உண்மைக்கு புறம்பானது!

முக்கிய செய்திகள் 2

அரசாங்கம் குறுகிய காலப்பகுதியில் 4 பில்லியன் டொலர்கள் கடன் பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள கருத்தானது உண்மைக்கு புறம்பானது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடு செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரித்துள்ளதாக சிலர் கூறிவருகின்றனர்.

நாட்டுமக்கள் இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகின்றது. இது புதிதாக பெற்றுக்கொண்ட கடன்தொகை அல்ல.

ரூபாவின் பெறுமதியின் பிரகாரம் கடந்த மூன்று மாதங்களில் கடன்தொகை குறைவடைந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது டொலரின் பெறுமதியின் ஒப்பிடுகையில் அதிகமாக காணப்படுகின்றது.

இதனையே அரசாங்கம் குறுகிய காலப்பகுதியில் 4 பில்லியன் டொலர் கடன்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியினர் கூறுகின்றனர்.

சர்வதேச நாணயநிதியத்திற்கு எமது வேலைத்திட்டம் தொடர்பில் நம்பிக்கை உள்ளது. தேசிய மக்கள் சக்தியின் இவ்வாறான கூற்று தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்தின் வேலைத்திட்டத்தில் இடையூறு ஏற்படாது. இந்த கூற்றில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை” இவ்வாறு நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பட்டிய தெரிவித்துள்ளார்.