நாட்டில் இன்றைய தங்க விலைச் சுட்டெண்

முக்கிய செய்திகள் 3

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (11) செவ்வாய்க்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 23,650 ரூபாவாகவும்,24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 189,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 21,850 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 174,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளதுடன் கடந்த நாட்களை விட இன்றையதினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகை வியாபரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.