மலாவி துணை ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்து: அனைவரும் உயிரிழப்பு

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேருடன் சென்ற விமானம் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியுடன் மேலும் 9 பேர் பயணித்த விமானம் காணாமல் போனதாக அந்நாட்டின் ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

தலைநகர் Lilongwe-இலிருந்து நேற்று(10) காலை புறப்பட்ட மலாவி பாதுகாப்பு படை விமானம், ரேடர் கண்காணிப்பிலிருந்து விடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி செயலகம் அறிவித்தது.

தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மாயமான விமானம் விபத்தில் சிக்கியது கண்டறியப்பட்டது. இந்நிலையில் விபத்தில் சிக்கி, துணை அதிபர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக மலாவி அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.